கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் தினமும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒவ்வொரு வார்டு, வார்டாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதனை தொடர்ந்து சுகாதாரம், குடிநீர், தேர்விலக்கு உள்ளிட்ட பணிகள் உடனடியாக செய்து முடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 51 வது வார்டுக்கு உட்பட்ட புல்லுவிளை, கோவில்விளை, காட்டுவிளை, காமச்சன்பரப்பு, திருநகர் உள்ளிட்ட இடங்களில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து துறை அதிகாரிகளுடன் தெரு, தெருவாக ஆய்வு செய்த மேயர் மகேஷ் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மோசமான சாலைகளை சீரமைத்து, மழைநீர் செல்ல வசதியா தேவையான இடங்களில் கழிவு நீர் ஓடை அமைக்க உடனடியாக மதிப்பீடுகள் தயார் செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் மேயர் உறுதியளித்தார். ஆய்வின் போது துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் லிவிங்க்ஸ்டன், மண்டல தலைவர் முத்துராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.