விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், நடேசன் நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன், 43 இவர், கண்டமங்கலம் மெயின்ரோட்டில் பழைய காவல் நிலையம் அருகே ‘மதர் ஸ்நாக்ஸ்’ என்ற பெய ரில் பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார்.தினமும் காலையில் கடையை திறந்து, முதல் நாள் இரவு பதிவான சி.சி. டி.வி., காட்சிகளை பார்ப்பது வழக்கம்.
வழக்கம்போல் காலை கடையைத் திறந்து சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்தார். அதில் நள்ளிஇரவு ஒருவர் இருசக்கர வாகனத்தில் டிப்டாப் உடை அணிந்து வந்து நபர் கடைக்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடையின் வராண்டாவை நோட்டமிடுகிறார். பின், டீ கடைக்கு பயன்படுத்தும் குடிநீர் குழாய்களின் இணைப்பை கழற்றி, அருகில் உள்ள பிளாஸ்டிக் வாலி குப்பைத் தொட்டியில் போடுகிறார்.
பின் அந்த பிளாஸ்டிக் வாலி குப்பை தொட்டியில் இருந்த குப்பையை தலை கவிழ்த்து 3 முறை தட்டுகிறார்.
குப்பைகளைக் கொட்டிய பின், அந்த குப்பை கூடையை திருடிக்கொண்டு, அவரது இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு செல்வது குறித்த சிசிடிவி வீடியோ பதிவாகி இருந்தது.
இது குறித்து பேக்கரி உரிமையாளர் கோபிநாதன் கொடுத்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவை கொண்டு குற்றவாளி தேடி வருகின்றன. டிப்டாப் உடைய அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் குப்பைத்தொட்டியை திருடி சென்ற சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.