நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் கணபதி பிளவர்ஸ் சார்பில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உருவ சிலை அமைக்கப்பட்டு அவரது தோளில் விநாயகர் கைகளை போட்டு அமர்ந்திருப்பது போல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
புனித் ராஜ்குமாரின் நினைவாக இந்த ஆண்டு விநாயகருடன் புனித் ராஜ்குமார் இருப்பது போன்று அரங்கம் அமைத்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த அரங்கத்துக்குள் பாம்பு புற்று, சிவலிங்கம், கிருஷ்ணர் திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமிகள், பத்மாவதி தாயார், நீரூற்றில் விநாயகர் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சி தருவது போல வடிமைக்கப்பட்டுள்ளது.
புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் அரங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் கண்டு களித்து வழிபாடு செய்து வருகின்றனர் .