காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் உள்ளது. இந்த திருமுக்கூடல் பகுதியில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வற்றாமல் உள்ளது.
பழையசீவரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் பிலாப்பூர், திருமுக்கூடல், பழையசீவரம், அருங்குன்றம், பழவேலி, என 15 கிராம மக்களுக்கு இந்த தடுப்பணை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வழக்கமாக ஒரு போகம் விவசாயத்திற்கே தண்ணீர்க்கு பஞ்சமாக இருந்த நிலையில் தற்போது தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் மூன்று போகமும் விவசாயம் செய்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் .
இதே போல் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் ஆனால் தற்போது இந்த தடுப்பணையால் தாம்பரம், பல்லாவரம் பகுதியில் குடிநீர் தடையின்றி கிடைத்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .