விழுப்புரம் பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் ஐந்தாவது தூண் மோசமான நிலையில் உள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டன அதில் விழுப்புரம் அடுத்துள்ள ஏனாதிமங்கலம் கப்பூர் இடையே 70 ஆண்டு பழமை வாய்ந்த எல்லீஸ் அணைக்கட்டு பழுதாகின இதேபோல் தளவானூர் எனதிரிமங்கலம் இடையே கட்டப்பட்ட மதுகு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன
இந்த நிலையில் தற்பொழுது கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணை திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் முழுவதும் இரு கரையிலும் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கால் தற்பொழுது பிடாகம் தென் பண்ணையாற்றில் பாலத்தின் ஐந்தாவது தூண் வெள்ளப்பெருக்கு காரணமாக அடி புறத்தில் அதிகமாக பள்ளம் காணப்படுகிறது இதனை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் பாலம் பழுதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இதை சரி செய்யுமா என விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.