வாலாஜாபேட்டை அருகே சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தடுப்பு சுவற்றின் மீது கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மனதாங்கல் பகுதியை சேர்ந்த தம்பதியான வெங்கட்ராமன் சத்ய பிரியா ஆகிய இருவரும் வாலாஜாபேட்டையில் இருந்து நவல்பூர் பகுதியில் இருக்கும் சத்யபிரியாவின் அம்மா வீட்டிற்கு காரில் புறப்பட்டு உள்ளனர். அப்போது வாலாஜா பேட்டை வி.சி.மோட்டூர் செல்லும் சாலையில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தடுப்பு சுவரில் கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்த இருவரையும் அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.