உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வந்தவர் நிதி. இவர் சூபியான் என்று இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து வந்திருக்கிறார். ஒரு கட்டடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்யவேண்டுமென்றால் தனது இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிதியிடம் கறாராக சொல்லி இருக்கிறார் சூபியான்.
ஆனால் நிதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் . நீ கட்டாயம் எங்கள் மதத்திற்கு , மாறியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் சூபியான். தொடர்ந்து நிதி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் சம்பவத்தன்றும் இதையே சூபியான் வற்புறுத்த, அதற்கு நிதி மறுக்க, இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது . அதில் ஆத்திரம் அடைந்த சூபியான் திடீரென்று நிதியை நான்காவது மாடியில் இருந்து பிடித்து தள்ளி இருக்கிறார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
சம்பவம் குறித்து நிதியின் தாயார் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், சூபியான் மீது கொலை முயற்சி, கட்டாய மதமாற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்த மத வெறி பிடித்த காதலனை தேடி வந்தனர்.
இந்நிலையில் சூபியானை பற்றிய துப்பு கொடுத்தால் 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து தீவிரமாக தேடி வந்தனர்.
சவ்காரா சௌரா பகுதியில் பவர் ஹவுஸ் அருகே போலீசாருக்கும் அங்கே பதுங்கியிருந்த சோபியாளுக்கும் இடையே நீண்ட என்கவுண்டர் நடந்திருக்கிறது. இதில் சூபியானை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சூபியானை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார்கள் போலீசார்.