Skygain News

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கத்தின் விலை..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு படி உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 200 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 38 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்துதுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 4 ஆயிரத்து 830 ரூபாய்க்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் 41,856 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 61.10 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.