Skygain News

தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த பலே திருடனை அலேக்காக பிடித்த பொதுமக்கள்…

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது பத்துக்கு மேற்பட்ட வாகன திருட்டில் ஈடுபட்ட வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கு உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் மீண்டும் செஞ்சி அடுத்த கவரைப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார்

நேற்று இரவு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் திருடி எடுத்து வந்த டிராக்டரில் டீசல் இல்லாததால் ஜெயங்கொண்டான் பகுதியில் நிறுத்திவிட்டு அங்கு நின்ற டாட்டா ஏசி வாகனத்தை அங்கிருந்து திருடி சென்றுள்ளார்.

அங்கு டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன உரிமையாளர் வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்து பின்னர் அவரை பின்தொடர்ந்து வேகமாக சென்ற பொழுது டாட்டா ஏசி விட்டு தப்பிக்க முயன்ற மணிகண்டன் துரத்தி சென்று பொதுமக்கள் உதவியுடன் பிடித்து செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது செஞ்சியில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் என வாகனம் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More