அமெரிக்காவில் 5 அடி நீள ராட்சத முதலையை அசுர பசியால் மலைப்பாம்பு முழுங்கிய நிலையில், பாம்பின் உடலில் இருந்து முதலையை வெறியேற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .
புளோரிடா மாகாணத்திற்கு மாற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த மலைப்பாம்பு ஒன்று ராட்சச முதலையை அப்படியே விழுங்கியுள்ளது. உலகின் மிக நீண்ட பெரிய பாம்பு வகைகளில் ஒன்று பர்மீஸ் மலைப்பாம்பு. பொதுவாக இந்த வகை பாம்பு 20 அடிக்கு மேல் வளரும் என கூறப்படுகிறது.
அந்தவகையில் 18 அடி நீளம் கொண்ட இந்த பர்மீஸ் மலைப்பாம்பு, 5 அடி நீளமுள்ள ராட்சத முதலையை அண்மையில் விழுங்கியுள்ளது. இதனையடுத்து அந்த பாம்பை கொன்று முதலையை அதன் குடலில் இருந்து வெளியேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிவித்துள்ள விலங்கியல் அறிஞர்கள், மலைப்பாம்பு 5 அடி நீள முதலையை விழுங்குவதற்கு தெற்கு புளோரிடாவின் மிதவெப்பமண்டல சூழல் மற்றும் பர்மிய மலைப்பாம்புகளின் நீண்ட ஆயுள் மற்றும் விரைவான இனப்பெருக்கம் ஆகியவையே காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
https://www.instagram.com/reel/Ckau1y6LNv8/?utm_source=ig_web_button_share_sheet