ஆற்காடு ரத்தினகிரி அருகே கள்ளச்சார விற்பனையில் ஈடுபட்டு வந்த முதியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுக்காவுக்கு உட்பட்ட மேலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி . 53 வயதான இவர் ரத்தினகிரி நகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் .
இந்த நிலையில் ரத்தினகிரி காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவரின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.