உத்தர பிரதேஷ் மாநிலத்தில் பள்ளி கட்டணம் செலுத்தாததில் அந்த பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி அளிக்காததால் பள்ளி மாணவி கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை ஷேர் செய்த வருண் காந்தி மனித நேயத்தை மறந்து விடாதீர்கள், கல்வி வியாபாரம் அல்ல என்று சொல்லி அந்த பள்ளிக்கு குட்டு வைத்தார்.

பா.ஜ.க.வின் பிரபல தலைவர்களில் ஒருவரும், மக்களவை எம்பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் சிறுமி அழும் வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும் அந்த டிவிட்டில், இந்த மகளின் கண்ணீர், கட்டணம் செலுத்தாததால் அவமானத்தை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான குழந்தைகளின் வலியை காட்டுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிகாரிகள் மற்றும் பொதுப் பிரதிநிதிகளின் தார்மீகப் பொறுப்பு, நிதிக் கட்டுப்பாடுகள் குழந்தைகளின் கல்விக்கு இடையூறாக இருக்கக் கூடாது. தனியார் கல்வி நிறுவனங்களே மனித நேயத்தை மறந்து விடாதீர்கள், கல்வி என்பது வியாபாரம் அல்ல என பதிவு செய்து இருந்தார். இது குறித்து அறிந்த அந்த பகுதி பா.ஜ.க. தொண்டர் ஒருவர், பால் வித்யா மந்திர் என்ற பள்ளியில் அந்த மாணவிக்கு அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பள்ளி கட்டணத்தை செலுத்தினார்.
எனவே இந்த வீடியோ பொதுமக்கள் இடையே பெரும் வருத்தத்தை அதித்துள்ளது. இதை நிகழ்வையோட்டி பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம், தவற விட்ட தேர்வை மறுபடியும் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததாக தகவல்.
इस बेटी के आंसू उन लाखों बच्चों की संयुक्त पीड़ा बता रहे हैं जिन्हें फीस न जमा होने के कारण उपहास झेलना पड़ता है।
— Varun Gandhi (@varungandhi80) October 18, 2022
आर्थिक तंगी बच्चों की शिक्षा में रोड़ा ना बने यह हर जिले के अधिकारियों व जनप्रतिनिधियों की नैतिक जिम्मेदारी है।
निजी संस्थान मानवता न भूलें, शिक्षा व्यापार नहीं है। pic.twitter.com/GZL9RwSICB