Skygain News

உண்மையை உரக்க சொல்ல உதயமானது SKY GAIN…

தமிழகத்தில் எத்தனையோ சாட்டிலைட் மற்றும் யூடூப் சேனல்கள் வருடத்திற்கு வருடம் ஆரம்பிக்கப்படுகிறது ஆனால் அவைகள் அனைத்தும் நடுநிலையோடு மக்களுக்கு உண்மையை உரக்க சொல்கிறதா என்றால் அதற்கு யாரிடமும் பதில் இல்லை . இதனால் பலர் செய்திகளை பார்ப்பதை கடமையாக நினைக்காமல் பொழுதுபோக்காகவே பார்த்து கடந்து செல்கின்றனர் . அதில் சிலர் ஒரு சேனலாவது இந்த பொறுப்பை தேசப்பற்றுடன் தலையாய கடமையாய் நினைத்து செயல்பட மாட்டார்களா என்று மனதுக்குள் குரல் எழுப்பி வருகின்றனர்.

அவர்களுக்காகவே தற்போது உதயமாகியுள்ளது SKY GAIN டிஜிட்டல் சேனல்கள்.. இதில் SKY GAIN NEWS , SKY GAIN ENTERTAINMENT , SKY GAIN KIDS , SKY GAIN DEVOTIONAL என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா புதுச்சேரியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது , இந்த விழாவில் SKY GAIN குழுமத்தின் President – முருகானந்தம் அவர்களும் , Vice President – ராமசந்திரன் அவர்களும் , COO – வினோத்குமார் அவர்களும் , சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன் அவர்களும், மாண்புமிகு புதுச்சேரி துணை சபாநாயகர் பெ. ராஜவேலு அவர்களும் , இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் திரு . அர்ஜுன் சம்பத் அவர்களும் , ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு U .லட்சுமிகாந்தன் அவர்களும் , மூத்த பத்திரிக்கையாளரும் புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்க தலைவருமான திரு .D.சிவகுமார் அவர்களும் கலந்துகொண்டு SKY GAIN டிஜிட்டல் சேனல்களை அறிமுகப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் SKY GAIN குழுமத்தின் பணியாளர்களும் , SKY GAIN NEWS சேனலின் செய்தியாளர்களும் கலந்துகொண்டனர்

SKY GAIN குழுமத்தின் President – முருகானந்தம் அவர்களும் , Vice President – ராமசந்திரன் அவர்களும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து இந்த மகிழ்ச்சியான அறிவிப்பினை கூறி வாழ்த்து பெற்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More