தமிழக முழுதும் பல மாவட்டங்களில் துணிக்கடை ,சூப்பர் மார்க்கெட் , வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் பிரபல கிரின்ஸ் என்னும் பல்பொருள் அங்காடியிலும் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது