கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் கல்வி நிறுவனத்தில், கடந்த வெள்ளிக்கிழமை பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டிருந்த இஸ்லாமிய மாணவனை பயங்கர தீவிரவாதியான கசாப் பெயரை சூட்டி அழைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவன் “என்னை எவ்வாறு தீவிரவாதியாக குறியிட்டு பேசலாம் என தொடர் கேள்வி எழுப்பினான் இவ்வாறுதான் உங்களது மகனையும் நீங்கள் ஒப்பிட்டு பேசுவீர்களா” என்று மாணவன் கேள்வி எழுப்பிய நிலையில் பேராசிரியர் மாணவனிடம் மன்னிப்பு கூறினார்.

இந்த சம்பவத்தை அங்குள்ள மற்றொரு மாணவன் தனது மொபைலில் படம் பிடித்து அது சமூக வலைதளங்களில் பயிரலான நிலையில் அந்த கல்லூரி நிர்வாகம் இன்று பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.