ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது சிபிஎஸ் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் எனவும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை கலைத்திட வேண்டும் எனவும் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டமானது அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்களது மூன்று அம்ச பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற்றது பின்னர் இந்த ஆர்ப்பாட்டமானது ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் முன்பு நடைபெற்றதால் அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.