Skygain News

மூதாட்டியின் தாலி செயினை அறுத்து சென்ற திருடர்கள்..! நாகை அருகே அரங்கேறிய பதைபதைக்கும் சம்பவம்…

நாகை தருமபுர மடத்து தென் சந்து பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. 73 வயது மூதாட்டியான இவர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது அவரின் எதிரே வந்த இளைஞன் திடிரென மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 பவுண் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு ஓடி உள்ளான்.

அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திருடனை துரத்தி உள்ளனர். அப்போது இருச்சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞன் திருடனை துரத்துவது போல் துரத்தி செயினை அறுத்துக் கொண்டு ஓடியவனை தனது இருச் சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பித்துள்ளான்.

இதுக் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மூதாட்டியிடம் விசாரித்து தெரு மற்றும் வீடுகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விவசாரணை மேற்க்கொண்டு வருகிறார். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலயே மூதாட்டியின் தாலிச் செயினை அறுத்து சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.