Skygain News

வரவேற்பை பெற்று வரும் கார்த்தியின் விருமன் பட ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி மீண்டும் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ‘விருமன்’ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ‘விருமன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

ஆக்சன் காட்சிகளுடன் வெளியான விருமன் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது. ‘விருமன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More