வருவாய்த்துறை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த சித்தலிங்கமடம் கிராம மக்கள் 50க்கும் மேற்ப்பட்ட கடை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுதும் நவம்பர் ஒன்றாம் தேதி ஊராட்சி தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்திருந்தன
அனைத்து ஊராட்சிகளையும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டன
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்திலிமடம் கிராம எல்லையை பிரித்து எடப்பாளையம் தனி வருவாய் கிராமமாக பிரிப்பதை கண்டித்து இன்று கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சித்திலிங்கமடம் கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்ப்பட்ட கடைகளை அடைத்தும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதானல் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.