அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பார்வதி நாயர்.இப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான பார்வதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.இவர் சென்னையில் நுங்கம்பாக்கம் ஏரியாவில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இவரது வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை செய்யும் நபர் அதிக விலையுள்ள இரண்டு வாட்ச், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருள்களை திருடி சென்றுள்ளதாக பார்வதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ரூ. 6 லட்சம் மதிப்பிலான வாட்ச், ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஒரு வாட்ச் மற்றும் 50 ஆயிரம் மதிப்புடைய லேப்டாப் திருடு போனதாம். இதையடுத்து தற்போது போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்