ராஜஸ்தான், ஒரிசா மாநிலங்களில் ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி அரசு துறையின் ஒப்பந்த பணியாளர்கள் இல்லாத துறையை உருவாக்கியது அதேபோல் தமிழகதிலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி அரசு துறையில் ஒப்பந்த பணியாளர்கள் இல்லாத தமிழனாக மாற்ற வலியுறுத்தி வருகிற ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் டாஸ்மார்க் விற்பனையாளர்கள் முதல் மாநில மாநாடு நடத்த உள்ளனர் அதற்காக மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில சிறப்புத் தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்றது இதில் மதுரை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி முதல் மாநாடு நடத்துவதற்காக குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதி கூறிய போது..
வருகிற ஜனவரி 26 ஆம் தேதி டாஸ்மார்க் விற்பனையாளர்கள் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. ஒரிசா ராஜஸ்தான் மாநிலம் போல் கோரிக்கை வலியுறுத்தி மாநாடு நடத்த உள்ளோம். தமிழகத்தில் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி நிதி வருவாயை அள்ளித்தரும் டாஸ்மார்க் விற்பனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும்.
கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றால் விடில் சிறை நிரப்பு போராட்டம், கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என்றார்.
டாஸ்மாக் கடைகளில் மதுமானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.. கடை வாடகை அட்டைப்பெட்டி கட்டணம் உட்பட அனைத்தும், விற்பனையாளர்கள் தான் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனை சரி செய்வதற்கு வாடிக்கையாளரிடம் தான் கேட்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே இதனை போக்க, டாஸ்மார்க் விற்பனையாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி நிரந்தர பணியை நிறைவேற்றி ஓய்வுதம் வழங்குவது மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றார்.
தொடர்ந்து பள்ளி சிறுவர்களுக்கு மதுபானம் வழங்குவது தற்போது வீடியோக்கள் வைரலாகி வருகிறது இது குறித்த கேள்விக்கு. எங்கேயாவது ஓரிரு இடங்களில் நடைபெற்று இருக்கும், ஆனால் எங்களது டாஸ்மார்க் விற்பனையாளர் சங்கம் பணியாளர்கள் உள்ள இடத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது அதனை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம் எனக் கூறினார்.