கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
