சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பல பிரச்சினைகள் எனக்கும் நடந்துள்ளது. ஹீரோ, டைரக்டர் இவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமா எனக் கேட்டுள்ளனர். எனக்கு அப்படிபட்ட வாய்ப்புகள் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். எந்தவொரு குற்றஉணர்வும் இல்லாமல் இரவில் நிம்மதியா தூங்க வேண்டும். நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
