புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது கேரள மாநிலத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது. ரூ. 1.18,350 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
தமிழக கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் புளியரை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்டை மாநிலமான கேரளாவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் அங்கிருந்து தப்பி கேரள பேருந்தில் தமிழகத்திற்குள் வருவதாக தனி பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் புளியரை காவல் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்திய போது பேருந்தில் வந்த மதுரை சேர்ந்த சுரேஷ் (எ) பட்டரை சுரேஷ், தூத்துக்குடியை சேர்ந்த எட்வின்ராஜ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 1,18, 350 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்து கைது செய்து சிறையிலடைத்தனர்.