திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலேயே நடைபெற்றதிலேயே மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பார்க்கப்படுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குஜராத்திற்கு விமானம் மூலம் தப்பி சென்ற 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஹரியானாவை சேர்ந்த கும்பல்தான் இதை செய்தது என்பது உறுதியாகி உள்ளது.
