உடல் ஆரோகிமுடன் இருக்க வேண்டும் என்றல் அதற்கு சரியான உணவு மற்றும் உடல் பயிற்சி அவசியமானது. அந்த வகையில் ஓட்ஸ் நமக்கு நல்ல உடல் நலத்திற்கு தேவையான ஒரு உணவாகும்

மேலும் இதில் உடல்நலத்திற்கு தேவையான ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் இதில் உள்ளன. ஓட்ஸ் உணவின் உடல்நல பயன்களை மேம்படுத்த நட்ஸ், பழங்கள், காய்கறிகள் மற்றும் மசாலாக்களை அதில் சேர்த்துக் கொண்டால் நம் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்
இந்நிலையில் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள், இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை அறவே தவிர்ப்பதோடு, இதயத்தை பலப்படுத்தும் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

அதனால் ஓட்ஸில் பீட்டா குலுக்கன் என்கிற பொருள் நிறைந்திருக்கிறது இது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. இதய தசைகளை வலுப்படுத்தி நம்மை காக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிக கவனம் செலுத்தணும். சர்க்கரை சத்து அதிகம் நிறைந்த அரிசி, கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஓட்ஸில் நிறைந்திருக்கும் பீட்டா குலுக்கன் எனப்படும் அதே வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவி அவர்களை காப்பாற்றுகிறது. நீரிழிவு நோய்களிகளுக்கு சுலபத்தில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்த்து, அவர்களுக்கு அடிக்கடி மிகுந்த பசியெடுக்கும் நிலையையும் கட்டுப்படுத்தி சுகரை கட்டுக்குள் வைக்கிறது.