75வது சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் தேசிய கொடியேந்தி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியிலிருந்து துவங்கிய பேரணி தூத்துக்குடி- பாளைரோடு வழியாக குரூஸ் பர்னாந்து சிலை அருகே பேரணியை நிறைவு செய்யப்பட்டது.

பேரணியில் ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி. சத்தியராஜ், வடபாபாகம் காவல் ஆய்வாளர் ரவி சுஜின் ஜோஸ், மத்திய பாகம் ஆய்வாளர் ஐயப்பன், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், ஆயுதபடை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து,
போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பேரணியில் கலந்து கொண்டனர்.