குவைத் நாட்டின் மகா புல்லா பகுதியில் இன்று அயலக திமுக குவைத் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் ஆகிய மூன்றும் இணைந்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கலாநிதி விராசாமி, திமுக அயலக அணி செயலாளர், மாநிலங்கள் அவை உறுப்பினருமான எம். எம். அப்துல்லா, திராவிடக் கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பு உரையாற்றி உள்ளார்.
