தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வரும் பொங்கல் போட்டியை நேரடியாக எதிர்கொள்கின்றன.
இதுகுறித்து பேசிய திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள தகவல் உண்மை தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 12-ஆம் தேதி ’துணிவு’ படமும், ஜனவரி 13-ஆம் தேதி ’வாரிசு’ படமும் வெளியாகின்றன என்றும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் நிச்சயம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஜில்லா, வீரம் படங்களை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.