பெங்களூருவில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழக அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதியது.இதில், டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி, தங்கள் வாழ்நாளில் பெரிய தவறை செய்தது.
ஆம், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்தனர்.தமிழக அணியின் சுதர்சனும், ஜெகதீசனும் இன்று வேறு ஐடியாவில் இருந்தனர்.ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய இவர்கள் மளமளவென ரன்களை சேர்த்தனர்.
Narayan Jagadeesan smashes his fifth consecutive century in Vijay Hazare Trophy 2022.#VijayHazareTrophy pic.twitter.com/v35sJ1Y6Ux
— CricTracker (@Cricketracker) November 21, 2022
வீசும் பந்து எல்லாம் பவுண்டரி, சிக்சருக்கு செல்ல ஜெகதீசன், 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.இதே போன்று சாய் சுதர்சனும் 102 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்களை விளாசினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 416 ரன்களை குவித்தது. இதன் மூலம் உலக அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய ஜோடி என்ற சாதனையை படைத்தது.