விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணிக்காக களம் இறங்கிய நாராயன் ஜெகதீசன் 277 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தார்.இதுகுறித்து பேசிய ஜெகதீசன், இந்த சாதனையை படைத்தது உண்மையிலே மகிழ்ச்சி அளிக்கிறது.
என்னுடைய குறிக்கோள் இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல அனைத்து ஆட்டங்களிலும் முழுமையாக 50 ஓவர் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நான் விடுவிக்கப்பட்டது என்னுடைய சாய்ஸ் கிடையாது.

அது அணி நிர்வாகத்தின் விருப்பம் அது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எனது கையில் இல்லை. நான் எனது கையில் என்ன இருக்கிறதோ அதனை மட்டும் தான் செய்ய முடியும் என்று ஜெகதீசன் பதில் அளித்தார்.