நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அருள்மிகு அபிராமி அம்பாள் சமேத பீமேஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் சோழ அரசர்கள் திருப்பணியால் எழுப்பட்டது என கூறப்படுகிறது .
பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மங்கலவாத்தியங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ராஜகோபுரத்தை கருட பகவான் சுற்றிவர ஆலய ராஜகோபுர கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

75 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளனான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்