துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவியாளர் ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள நிலையில்
92 பணியிடங்களில் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குருப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதற்கிடையே ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விண்ணப்பத்தாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அதன்படி விண்ணப்ப திருத்தத்த்தை விண்ணப்பத்தாரர்கள் 27.08.2022 மதியம் 12 மணி முதல் 29.08.2022 மதியம் 11.59 வரை மேற்கொள்ள முடியும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.