தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தைத் விண்ணப்பதாரர்கள் தனியே செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு முறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

துறை :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வேலையின் பெயர் – உதவி அலுவலர்( Junior Assistant ) , உதவியாளர் ( Assistant)
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை – 161
அறிவிப்பு வெளியான தேதி – 23.08.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 21.09.2022
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
விண்ணப்பம் திருத்தம் செய்ய – 26.09.2022 நள்ளிரவு 12.01 முதல் – 28.09.2022 இரவு 11.59 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மைச் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் – 06.12.2022
மாத சம்பளம் –
சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் / நிதிப் பிரிவு உதவி அலுவலர் – ரூ. 36,400 – ரூ. 1,34,200
சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் / நிதிப் பிரிவு உதவியாளர் – ரூ. 20,000 – ரூ. 73,700
வயது வரம்பு –
பிரிவு உதவி அலுவலர் – 35 வயதுக்குள் இருக்க வேண்டும் . பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவியாளர் – 30 வயதுக்குள் இருக்க வேண்டும் . பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள் –
தாள்-1 பொதுத் தமிழ் – 18.12.2022 ( காலை 9.30 மு. ப. முதல்12.30 பி. ப. வரை )
தாள்-1 பொது ஆங்கிலம் – 18.12.2022 ( மாலை2.00 பி. ப முதல்5.00 பி. ப. வரை )

தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் (தனித்தனியே ஒவ்வொரு பதவிக்கும் பொருந்தும்) தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னர், அசல் சான்றிதழ்களைச் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் என்றும், பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வானது சென்னை (0101) தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.