Skygain News

தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று…

தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பண்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று .

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஜஸ்டின் செல்வராஜ். திரை வாழ்க்கைக்காக தனது பெயரை எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யாவுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு.

இந்த கணவனால் வெகுநாட்கள் தூங்காமல் உழைத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு, இயக்குநர் பாக்யராஜின் உதவியாளராக பணி செய்யும் வாய்ப்பு கிடையாது . இதனை தொடர்ந்து இயக்குநர்கள் வசந்த் மற்றும் சபாபதியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜே சூர்யா, அஜித் நடித்த உல்லாசம் படத்தில் உதவி இயக்குநராக பயணியாற்றியுள்ளார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு பணியின் போது ‘வாலி’ படத்தின் கதையை சொல்லி, அதை அஜித்தை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பை போராடி பெற்றார். அந்த படத்தின் தயாரிப்பாளரை எஸ்.ஜே. சூர்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் நடிகர் அஜித் தான்.

சிம்ரன், விவேக் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தில் ஜோதிகாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தது எஸ்.ஜே சூர்யா தான். வாலி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் தன் நிறுவனத்திற்கு ஒரு படத்தை மீண்டும் இயக்கும்படி எஸ்.ஜே. சூர்யாவை கேட்டுக்கொண்டார்.

அந்த வழியில் உருவானது தான் குஷி. விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வந்த இந்தப் படமும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அன்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது . பின்னர் நியூ படத்தின் மூலம் முதல் முதலாக நடிகரானார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து அன்பே ஆருயிரே படத்தையும் இயக்கி, ஹீரோவாக அசத்தினார் .

ஹீரோ மட்டுமின்றி வில்லன் கதாப்பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. ஸ்பைடர், மெர்சல் படங்களில் அவரது வில்லன் கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதேபோல் சமீபத்தில் வெளிவந்த மாநாடு படத்திலும் அவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது.

இப்படி பண்முக திறமைகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More