Skygain News

நாளைக்கான திருவிழாவிற்கு இன்றே களைகட்டும் கூட்டம்..!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது .

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் ஆகும். இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜை உடன் தொடங்கியது. நாலாம் நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை அபிஷேகம் நடந்தது.

எனவே உச்சநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆறாம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின் காலையில் 9:00 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் மற்றும் மதியம் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்பு மாலை நாலு மணி அளவில் கடற்கரையில் சாமி ஜெயந்திநாதர் சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏழாம் நாளான நாளை மறுநாள் இரவு 11 மணி அளவில் சாமி குமர விடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்நிலையில் கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து பலர் விரதம் இருந்து வருகிறார்கள். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.