திருவாரூரில் விஜயபுரம் வர்த்தக சங்கம் கடந்த 1955 ஆம் ஆண்டு பதிவு செய்யபட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது கடந்த 15 ஆண்டுகளாக சங்கத்தின் பொறுப்பாளர்கள் சுயலாபத்திற்காக செயல்பட்டு வருகிறார்கள் வரவு செலவு கணக்கை கூட்டத்தில் சரிவர காட்டாமல் இருக்கிறார்கள் மேலும் திருவாரூர் விஜயபுரம் எல்லைக்குட்பட்ட வணிகர்கள் மட்டுமே இந்த சங்கத்தின் வர்த்தர்களாக இருக்கவேண்டும், ஆனால் தற்போது எல்லைக்குள் இல்லாத நபர்களை சங்கத்தில் இணைத்து இருக்கிறார்கள்.
மேலும் சங்கத்தில் நிறைய முறைகேடு நடந்துள்ளதாகவும் 10 ஆண்டுகளாக சங்கத்தின் எந்த ஒரு கூட்டமும் நடத்தவில்லை எனவும் அந்த சங்கத்தின் மற்றொரு பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி சங்க தேர்தல் நடைபெறுகிறது என துண்டு பிரசுரம் வழங்கி அறிவித்துள்ளனர். இந்த தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகி கூறும்போது திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் தேர்தல் வருகின்ற 13.12.22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என வணிகர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது எனவும் ஆனால் அந்த சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது எனவும் போலியான உறுப்பினர்களையும் வெளி உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்துகின்றனர் இந்த தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் மேலும் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர் பலமுறை மாவட்ட பதிவாளரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர் இரண்டு நாளில் சரியான நியாயம் கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது நாளில் அனைத்து வணிகர்களும் உண்ணாவிரதம் இருப்போம் எனவும் முறையான தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.