ஆவடி கௌரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி/59 இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி வி ஆர் டிஇ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவடி ஜே பி எஸ்டேட்டில் ஒரு பழைய வீட்டை வாங்கி உள்ளார் அந்த வீட்டில் மறு சிறு அமைப்பு பணிகள் முடிவுற்று வர்ணம் பூசும் பணி செய்து வந்துள்ளார் .
சனி ஞாயிறு அன்று வேலையாட்கள் வராத காரணத்தினால் பால்பாண்டி தனியாக வர்ணம் பூசி வந்துள்ளார் அப்போது தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு குளிக்க சென்றுள்ளார் குளித்துவிட்டு வந்து சார்ஜ் ஏறும்போதே செல்போனில் பேசியுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜர் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து வீட்டின் அருகே உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்து கிடந்த உடலை கைப்பற்றிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பழைய வீட்டிற்கு வர்ணம் பூசும்போது மின்சாரம் பாய்ந்து மத்திய அரசு ஊழியர் பலியானது பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது