Skygain News

யூடியூபால் வந்த விபரீதம்: திடீரென மயமான 10-வகுப்பு மாணவன்..!

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(48) இவர் தனியார் கம்பனியில் வேலை செய்துவருகிறார். இவரது 16 வயது மகன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், இது குறித்து வேன் டிரைவரிடம் கேட்டபோது பள்ளி வாசலில் இறக்கி விட்டதாகவும் அதன் பிறகு சிறுவன் வராதது குறித்து தெரியாது எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் சிறுவனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தபோது அங்கேயும் இல்லாததால் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பள்ளி சிறுவன் கடத்தப்பட்டானா? அல்லது வேறு எங்கேயாவது சென்றுள்ளனா? என்ற கோணத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், செல்போன் சிக்கனலை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர். அவனை நெருங்கமுடியாத நிலையில் சிறுவன் அவனது தொலைப்பேசி எண்ணை பயன்படுத்தாமல், அவரது தந்தையின் சிம்கார்டை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலமாக மூன்று முறை பணம் எடுத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் அவன் பணம் அனுப்பி எண்ணிற்கு தொடர்பு கொண்ட போலீசார் சிறுவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தங்கியிருந்த சிறுவனை மீட்டு விசாரணை செய்ததில், அடிக்கடி செல்போன் பயன்படுத்தும் போது பெற்றோர் கடன் வாங்கி படிக்க வைப்பதாக சொல்லி காட்டியதாகவும், அதனால் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என சொந்த காலில் நிற்பது எவ்வாறு? என யூடிப்பில் வீடியோ பார்த்து ஏதாவது வேலையை தேடி கொள்ளலாம் என வீட்டை விட்டு வெளியேறியதும், செலவுக்காக அப்பாவின் கூகுள் பேவை பயன்படுத்த அவரது சிம்கார்டை எடுத்து வந்ததாகவும், நாளை வெளிமாநிலத்திற்கு சென்றுவிடலாம் என திட்டமிட்டு இருந்ததாகவும் அதற்குள் போலீசார் தன்னை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளான்.

சிறுனின் பெற்றோரை வரவழைத்த போலீசார், சிறுவன் மற்றும் பெற்றோருக்கு அறிவுரைகூறி அனுப்பிவைத்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More