நாகர்கோவிலில் அருகேயுள்ள கோட்டார் ஆறுமுகம்பிள்ளை கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி.இவரது மகள் மனோசுதா.பிரசவத்திற்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி பிரசவவார்டில் கடந்த 29 ம் தேதி சேர்த்தனர்.
பிரசவத்திற்கு செல்லும் முன்பு மனோசுதா அணிந்து இருந்த 3 பவுன் செயின்,அரைபவுன் தாலி, மற்றும் கம்மல் ஆகியவற்றை கழற்றி கைப்பையில் வைத்துள்ளார். இன்று காலையில் கைப்பையை பார்க்கும் போது நகைகளை காணவில்லை.இது குறித்து முத்துலட்சுமி ஆசாரிப்பள்ளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.