புதுவை மீன்வளத்துறை மற்றும் மத்திய மீன்வள கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனம் இணைந்து புதுவை மீனவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இந்தநிலையில் ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவிகளின் பயன்பாடு குறித்து 3 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது. மீன்வளத்துறையில் நடந்த பயிற்சி முகாமை துறை இயக்குனர் பாலாஜி தொடங்கி வைத்தார்.

மத்திய கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவன அதிகாரிகள் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாளும் விதம் குறித்து விளக்கம் அளித்தனர்.