தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நாயகியாக வலம் வருகின்றார் திரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய த்ரிஷா இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா.பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சி உள்ளதால், புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகை திரிஷாவும் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை திரிஷாவிடம், அவர் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்டு சிரித்த திரிஷா, இது பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி என்பதால், அது சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பேன் என சொல்லிவிட்டார்.

இதில் தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்காததால், அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லப்படுகிறது.இதையடுத்து கில்லி,திருப்பாச்சி ,குருவி படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் த்ரிஷா இணையவுள்ளதால் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்