உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் கொடூர தாக்குதல் இன்று 210 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இதுவரை இரண்டு நாடுகளிலும் ஏரளமான படைவீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பெரும்பாலான இடங்களை , உக்ரைன் மீண்டும் மீட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் புதின், அதிரடியான பல திட்டங்களை கையிலெடுத்துள்ளார். இச்சூழலில் உலக வரைபடத்திலிருந்து உக்ரைனை நீக்க ரஷ்ய முயன்று வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டம் உரிய கொரோன முன்னெச்சரிக்கையுடன் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது வெட்ககேடான செயல். அத்துடன் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முக்கிய கொள்கைகளை ரஷ்யா மீறியதாக குற்றம் சாட்டிய அவர், உக்ரைனை கைப்பற்ற ராணுவத்தில் பழைய வீரர்களை சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுதிருப்பதாக தெரிவித்தார். ரஷ்யாவின் இந்த அத்துமீறலை உலக நாடுகள் உற்று கவனிக்க வேண்டும் என்று பைடன் கேட்டுக்கொண்டார்.