சென்னை, மாதவரம், தபால் பெட்டி பகுதியை சேர்ந்தவர் அகிலன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி செவ்வந்தி. இவர்களுக்கு அவந்திகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.
வீட்டில் சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அவந்திகா சாதம் வடிக்கும் பாத்திரத்தை தலையில் கவிழ்த்ததால்
பாத்திரம் தலையில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அகிலன்,செவ்வந்தி இருவரும் தங்களுடைய மகளின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரம் போராடியும் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழுது துடித்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மாதவரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி லாவகமாக தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுத்து குழந்தையை மீட்டனர்.