விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் துருவை கிராமம் அருகே இரண்டு பேர் பறவைகளை வேட்டையாடுவதாக திண்டிவனம் வனச்சாரகம் அலுவலகத்திற்கு தகவல் வந்தது இதை அடுத்து வனச்சரகர் அஸ்வினி மற்றும்வன அலுவலர்கள் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்பொழுது பறவைகளை வேட்டையாடிய புதுவை மாநிலம் கருவாடிகுப்பம் பகுதியை சேர்ந்த முருகன் வயது 27,பிரபு வயது 38,ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 22 அரிய வகை பறவைகள்,
இரு சக்கர வாகனம் ஒரு நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும்
அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.