கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையில் தத்தளித்து போகும் வாகன ஓட்டிகள் பலர்ளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் சாலையில் நீர் தேங்கி உள்ளதால் சரியாக வாகனத்தை நம்மால் ஓட்டி செல்ல முடியாது. குறுக்கே
மற்ற வாகனமோ இல்லை வேறு ஏத்தாது மிருகங்களோ சென்றாலும் நம்மால் நமது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விடும் பின்னர் விபத்து ஏற்பட்டுவிடுகிறது. இது போன்ற ஒரு சம்பவம் தன் நிகழ்ந்து உள்ளது. சென்னையில் இரண்டு நாட்களாவே மழை கொட்டி தீர்த்துள்ளது இந்நிலையில் நேற்று இரண்டு இளைஞர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து பேருந்து முன்பாக நின்று டான்ஸ் ஆடுகிறார்கள்.

இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து பலரும் கண்டித்து வருகின்றனர். ’’இப்படி பண்றது எல்லாம் விளையாட்டா நெனச்சு விட்டா ஒருநாள் பெரிய விபரீதமா முடியும். சென்னை போலீசாருக்கு மழை காலத்தில் எவ்வளவோ வேலை இருக்கும், இதுல இவிங்களையும் தட்டி வெச்சு அவுங்க வாயாலா மன்னிப்பு கேட்கும் காணொளி ஒன்னு போட்டு விடுங்க, அத பார்த்தாவது மத்தவங்களுக்கு புத்தி வரட்டும்’’ என்று ஜப்பான் ரகு என்பவர் பதிவிட்டு இருக்கிறார் என்றும் பலர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த இரண்டு இளைஞர்கள் போக்குவரத்து தடைசெய்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபத்தை விளைவித்தல்,பொது இடத்தில் நன்னடதத்தை இன்மை என்கிற குற்றப்பிரிகளில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமே என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களை பிடித்து பத்து பேருந்துகளை உள்ளே வெளிளியே சுத்தமா துடைச்சு கொடுத்துட்டு போகச் சொல்லிடணும் என்று பலரும் ஆத்திரப்பட்டு வருகின்றனர்.
இதெல்லாம் நியூசென்ஸ் இல்லியா 🙄 pic.twitter.com/XVVczcrKp8
— டான் (@krajesh4u) November 1, 2022
இந்த வீடியோவும், கருத்துக்களும் சென்னை காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், ‘’தங்களுடைய தகவலுக்கு நன்றி. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’என்று உறுதி அளித்திருக்கிறது காவல்துறை.