Skygain News

6.5 ஆண்டுகளுக்கு பிறகு நட்பாகும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான்…!

ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட 6.5 ஆண்டுகளுக்கு பிறகு தனது தூதரை ஈரானுக்கு அனுப்புவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ள அரிக்கையில், ஈரான் உடனான உறவுகளை வலுப்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகளுக்கு இணங்க, தூதரக பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியாக ஈரானுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் சைஃப் முகமது அல் ஜாபி, வரும் நாட்களில் தனது கடமைகளை மீண்டும் தொடங்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஈரானில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்கு பங்களிக்க அமீரக தூதர் அல் ஜாபி ஈரான் செல்வார் எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் ஈரானிய எதிர்ப்பாளர்கள் சவுதி தூதரக தூதரகங்களை தாக்கியதை அடுத்து, ஈரானின் இராஜதந்திர உறவுகளை பஹ்ரைன், சவூதி அரேபியா மற்றும் சூடான் முறித்துக் கொண்டன. இதற்கு மத்தியில் 2016இல் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்தது.

எனுனும் பல ஆண்டுகால பகைமைக்குப் பிறகு, வளைகுடா கடல் மற்றும் சவுதியின் எரிசக்தித் தளங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து 2019 இல் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் மீண்டும் சுமூக உறவில் ஈடுபடத் தயாராக உள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம், அமீரகம் மற்றும் ஈரானிய வெளியுறவு மந்திரிகள் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தொலைபேசியில் உரையாடினர். ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வணிக மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More