தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர் என பலமுகம் கொண்டவராக வலம் வருகின்றார் உதயநிதி. மேலும் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி செம பிஸியான ஆளாக இருக்கின்றார்.
இந்நிலையில் உதயநிதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதுபற்றி சமீபத்தில் பேசிய உதயநிதி, எனக்கும் நடிகர் விஜய்க்கும் சில மனஸ்தாபம் ஏற்பட்டது.

என்னை பற்றி அவரிடமும், அவரை பற்றி என்னிடமும் சிலர் பேசி பிரச்சனையை உருவாக்கினார். ஒரு நாள் நேரில் அவரை சந்தித்த போது நடந்ததை கூறினேன். அதன் பிறகு நாங்கள் மீண்டும் நண்பர்களாக நெருங்கி பழகினோம் என்றார் உதயநிதி. மேலும் உதயநிதி விஜய்யை வைத்து தான் முதல் படத்தை தயாரிப்பேன் என இருந்தது குறிப்பிடத்தக்கது