விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.
இந்நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் அஜித்தின் துணிவு படமும் வெளியாகின்றது. எனவே வாரிசு படத்தின் வசூல் பாதிக்கும் என நினைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் வந்துள்ளது.
அதாவது தெலுங்கு திரையுலகினர் ஆந்திராவில் வெளியாகும் தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை என்றும், எஞ்சிய திரையரங்குகளில் மட்டுமே மற்ற மொழி படங்கள் வெளியாகும் என்றும் அறிவித்தனர். எனவே வாரிசு படத்திற்கு திரையரங்கங்கள் கிடைப்பது தற்போது சிக்கலாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் குறித்து பல தமிழ் பிரபலங்கள் வாரிசு படத்திற்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது பற்றி நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதியிடம் கேட்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கின்றதே, இதை சரிசெய்ய பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி , தெலுங்கு திரையுலகில் நாம் எப்படி பேசமுடியும், தலையிடமுடியும் என கூறிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது