மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த கலகத் தலைவன் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல் பாதி தீயாக இருக்கிறது. காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் தேவையில்லாதது போன்றும் இருக்கிறது. ஆனால் இடைவேளை வரும்போது பயங்கரமாக இருக்கிறது என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
— Leosivakumar (@Sivakumar0215) November 17, 2022
அதேபோல் மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், கலகத்தலைவன் நேர்த்தியான திரில்லர் படம். இரயில்வே ஸ்டேஷன் காட்சியும், கிளைமேக்ஸ் காட்சியும் செம்ம. ஹீரோயின் வரும் சீன்கள் மொக்கை. அவர் வரும் காட்சிகளை மொத்தமாக தூக்கி இருக்கலாம். இசை சரியில்லை. உதயநிதி, ஆரவ் மற்றும் கலையரசனின் நடிப்பு அருமை. தடம் அளவுக்கு இல்லை என்றாலும் பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
#KalagaThalaivan 3.25/5 A Decent Thriller. Railway Station Scene🔥 & Climax Portion Sema👏… Heroine Scenes Mokka. Heroine Portion ah Motthama Thookirukalam. Music Worst. Udhay, Aarav & Kalai Performance Good. Thadam Alavuku Illa But WATCHABLE…
— Trendswood (@Trendswoodcom) November 18, 2022
இவ்வாறு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை விட பாசிட்டிவான விமர்சனங்களே வருவதால் இப்படம் உதயநிதிக்கு வெற்றியை தேடி தரும் என தெரிவது குறிப்பிடத்தக்கது